தமிழ்நாடு – மேற்கு வங்​கம் ஆட்டம் டிரா

சிலப்​ப​தர், ஜன. 29- அசாம் மாநிலம் டகு​கானா மற்​றும் சிலப்பதரில் சந்தோஷ் டிராபி கால்​பந்து தொடரின் இறுதிக்​கட்ட சுற்று நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்​றுள்ள தமிழ்நாடு அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று மேற்கு வங்​கத்​துடன் மோதியது. இந்த ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்தது. தமிழ்​நாடு அணி தரப்​பில் 61-வது நிமிடத்​தில் நந்த குமார் அனந்த​ராஜ் கோல் அடித்​தார். மேற்கு வங்​கம் அணி தரப்​பில் 81-வது நிமிடத்​தில் சுஜித் சாது தலை​யால் முட்டி கோல் அடித்தார். 4 ஆட்​டங்​கள் முடிவடைந்​துள்ள நிலை​யில் மேற்கு வங்​க அணி 10 புள்ளிகளு​டன் முத லிடத்​தில் உள்ளது. தமிழ்​நாடு அணி 7 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தில் உள்​ளது. தமிழ்​நாடு அணி தனது கடைசி ஆட்​டத்​தில் நாளை (30-ம் தேதி) உத்தராகண்ட் அணியுடன் மோதுகிறது