வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் வாக்கு?

டெல்லி: ஜனவரி 29-
வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு தொடர்பாக பதிலளிக்குமாறு,
யுஜிசி மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொந்த ஊர்களில் வாக்கு இருக்கும் இளம் வாக்காளர்கள் பலரும் வெளியூர்களில் படிப்பதால், தேர்தல் நேரத்தில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை 100 விழுக்காடு கொண்டு வர வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. வாக்களிப்பதன் அவசியத்தையும் வாக்களிக்க வேண்டிய கடமை பற்றியும் விழிப்புணர்வு பிரசாரஙகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் அதேநேரத்தில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியாவில், மக்கள் கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிக்கிறார்கள். இவர்களில் 18 வயது நிரம்பியர்களுக்கு அவர்கள் பிறந்த சொந்த ஊரில் வாக்குகள் உள்ளன. ஆனாலும் தேர்தல் நேரத்தில் வெளியூர்களில் இருப்பதால், வாக்குசெலுத்துவதற்காக பலரும் வருவது இல்லை. இதுவே வாக்கு சதவீதம் சரிவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த நிலையில்தான் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியகள் மற்றும், வயது முதிர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் தபால் ஓட்டு வசதியை வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் அளிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. தபால் வாக்குப்பதிவு வசதி அந்த மனுவில், தங்கள் சொந்த தொகுதிகளுக்கு வெளியே உள்ள மானவர்கள் வாக்கு செலுத்த ஏதுவாக பயனுள்ள வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். தற்போது உள்ள அமைப்பில் ஜனநாயக கடமையை பெரிய அளவிலான மாணவர்களால் பயன்படுத்த முடியவில்லை.