கம்பர் படைப்புகள் ஆய்வு

சென்னை: ஜனவரி 30-
‘கம்​பரின் படைப்​பு​கள் மீதான ஆய்​வு​களை அதி​கரிக்க வேண்​டும்’ என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரிவித்​தார். பாரதிய வித்யா பவன் சார்​பில் ‘கல்விக் கூடங்​களில் கம்​பர்’ விருது வழங்​கும் விழா சென்னை மயி​லாப்​பூரில் நேற்று நடை​பெற்​றது.
இதில் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்ட ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, பள்ளி மற்​றும் கல்​லூரி அளவில் நடத்​தப்​பட்ட பேச்​சுப் போட்​டிகளில், வெற்​றி​பெற்ற மாணவர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​களை வழங்​கி​ பேசி​ய​தாவது: கம்ப ராமாயணம் உட்பட இதி​காசங்​கள் நமது கலாச்​சா​ரம், பண்​பாடு போன்ற வாழ்​வியல் முறை​களை எடுத்​துரைக்​கின்​றன.
நம் நாட்​டின் வடகிழக்​கில் வசிக்​கும் பழங்​குடிகள் முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தரப்​பினரும் ராமரை ஏற்​றுக் கொண்​டுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்​காக நாட்டின் அனைத்து பகு​தி​களில் இருந்து பொது​மக்​கள் புனித நீர் மற்​றும் மண்ணை அயோத்திக்கு அனுப்பி வைத்​தனர். இதில் கிறிஸ்தவர்​, பழங்​குடி​யினரும் அடங்​கு​வர்.
அந்த வகை​யில் தமிழகத்​தில் தேசிய விடு​தலை உணர்வை உரு​வாக்​கிய​தில் கம்​பரின் படைப்​பு​களுக்கு முக்​கிய பங்​குள்​ளது. ஆனால், மாநிலத்​தில் அதற்கு உரிய அங்​கீ​காரம் கிடைக்​க​வில்​லை. பக்​தி, அறி​வியலுக்கு எதி​ரானது எனக்​கூறி அவற்றை சிலர் அழிக்க முயல்கின்​றனர்.இந்​தி​யில் துளசி​தாசர் எழு​திய ‘ராமசரித​மானஸ்’ மீது ஆயிரக்​கணக்​கான முனைவர் பட்ட ஆய்​வு​கள் உள்ளன, ஆனால், தமிழில் கம்​பர் எழு​திய ராமாயணம் மீது குறைந்த அளவிலே ஆய்​வு​கள் இருக்​கின்​றன. எனவே, கம்​பரின் படைப்​பு​கள் மீதான ஆய்​வு, ஆராய்ச்​சிகளை அதி​கரிக்க வேண்​டியது நமது கடமை​யாகும். இவ்​வாறு அவர் பேசி​னார்.