
சென்னை: ஜனவரி 31
2026 பட்ஜெட்டில் பிஎஃப் சம்பள உச்சவரம்பு மற்றும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தி, தனியார் துறை ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நீண்டகால சேமிப்பு மற்றும் வரிச் சலுகை கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. 2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக தனியார் துறை ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், இந்த பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
தற்போது உள்ள பொருளாதார சூழலில், ஊழியர்களின் கைகளில் அதிக பணம் புழங்கும் வகையில் வரி சலுகைகள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் பெரிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு தற்போதைய விதிமுறைப்படி, பிஎஃப் பங்களிப்பு ஆண்டுக்கு 2.5 லட்சத்தைத் தாண்டினால் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது.. இந்த வரம்பை 10 லட்சமாக உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, வேலை மாறும் ஊழியர்களுக்கு வசதியாக, வரி விலக்கு பெறுவதற்கான ஐந்தாண்டு காலக் கெடுவை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.
ஊதிய வரம்பு உயர்வு மேலும், இபிஎஃப் திட்டத்திற்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பை 15,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அமலுக்கு வரும் பட்சத்தில், லட்சக்கணக்கான புதிய ஊழியர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். முக்கியமாக கடந்த 11 வருஷமாக மாற்றமில்லாமல் இருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையான 1000 ரூபாயை, 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது ஓய்வூதியதாரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட்டில் இதற்கான விடை கிடைக்கும் என்று ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தினரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்… இபிஎஃப் ஓ 25000 உயர்வு? அதேசமயம் இங்கு இபிஎஃப் ஓ பற்றியும் சொல்ல வேண்டி உள்ளது.. தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்படும் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
வழக்கமாக ஒரு தொழிலாளியின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாகப் பிடித்தம் செய்யப்படுகிறது.. அதே அளவிலான தொகையை நிறுவனமும் தொழிலாளியின் கணக்கில் செலுத்துகிறது.
















