
புதுடெல்லி: பிப்ரவரி.2- மத்திய பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக ராகுலுக்கு பதிலளித்து டெல்லியில் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “அனைத்து தரப்பினரையும் மனதில் கொண்டே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியில் விமர்சிக்க விரும்பினால், ராகுல் தாராளமாக செய்யட்டும். ஆனால், உங்கள் வாதத்துக்கு உண்மையான அடிப்படைகளை நீங்கள் எனக்கு கூற விரும்பினால், அதற்கு பதிலளிக்கத் தயார். விமர்சனம் உண்மையாக இருக்க வேண்டும்” என்றார்.















