தேசிய பங்குச் சந்தை தலைவருடன் பியூஷ் கோயல் சந்திப்பு

மும்பை: பிப்.3-
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைவர் ஆசிஷ் குமார் சவுகானை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சந்தித்தார்.
அப்போது, முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இந்தாண்டு பட்ஜெட்டால் தேசிய பங்குச் சந்தையில் ஏற்படும் ஒட்டுமொத்த பலன்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. வளர்ச்சிக்கு ஆதரவாக பட்ஜெட் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். புதிய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் அவர்கள் அமைச்சர் பியூஷ் கோயலுடன் பகிர்ந்து கொண்டனர்.இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், ”தேசிய பங்குச் சந்தையில் பட்ஜெட் பலன்கள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டம் சிறப்பாக இருந்தது.
வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்த கருத்து மகிழ்ச்சி அளித்தது” என குறிப்பிட்டுள்ளார்.