
புதுடெல்லி, பிப். 7- இந்தியாவில் தங்கம் விலை எவ்வளவு அதிகரித்து வருகிறதோ அதற்கு நிகராக தங்க கடன் சந்தையும் அதிகரித்து வருகிறது. ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக நம் அனைவருமே கையில் இருக்கும் தங்க நகையை அடகு வைத்து தான் பணமாக மாற்றிக்கொண்டு பயன்படுத்துகிறோம். Stay updated with the latest Budget news Powered by Banking Partner இந்தியாவில் 2024 டிசம்பரில் தங்க நகைகடன்கள் அளவு 1.68 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. அதுவே 2025 டிசம்பரி 3.82 டிரில்லியன் ரூபாயாக 127 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை அதிகரித்ததால் ஏராளமான மக்கள் தனிநபர் கடன்களுக்கு மாற்றாக அதிகமாக தங்க நகை கடன்களை வாங்குகிறார்கள். ஏனெனில் விலை உயர்வால் நம் கைவசம் இருக்கும் தங்கத்திற்கே முன்பை விட அதிக அளவு கடன் தொகை கிடைக்கிறது, தனிநபர் கடன்களை விட தங்க நகை கடன்களில் வட்டி விகிதம் குறைவு. இந்த சூழலில் நாட்டில் அதிகரித்து வரும் தங்க கடன்கள் குறித்தும் , தங்க நகை கடன் மதிப்பை நிர்ணயம் செய்யும் loan to value எனப்படும் LTV ரேஷியோ விகிதம் குறித்தும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். 2 நாட்கள் நடந்த நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டில் தங்க நகை கடன்களின் அளவு, அதில் எவ்வளவு கடன் வழங்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பணம் நிலுவையில் இருக்கிறது, வங்கிகள் வசம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பது குறித்து எல்லாம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாக சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருக்கிறார். தங்க கடன் விவகாரத்தில் தற்போது எந்த ஒரு கவலையும் நம் கொள்ள தேவை இல்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தங்க நகை கடன் வாங்கும் அளவு இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது, அதே வேளையில் தங்கத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது என்பதால் அது பற்றி தற்போதைக்கு கவலை கொள்ள தேவையில்லை என்கிறார். தங்கத்தின் விலையில் அதிகபட்சம் 85 சதவீதம் வரையிலான தொகையை கடனாக வழங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான நிதி நிறுவனங்களும் வங்கிகளும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான விகிதத்தில் தான் எல்டிவி ரேஷியோவை பயன்படுத்தி கடன் வழங்குகின்றன என கூறியுள்ளார். எனவே தங்க கடன்கள் அதிகரிப்பதும் தங்கம் விலையில் உள்ள ஏற்ற இறக்கமும் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார். தற்போது பெரும்பாலான வங்கிகள், நிதி நிறுவனங்கள் 70%க்கும் கீழ் தான் தங்கத்தின் மதிப்பின் கடனாக வழங்குகின்றன. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 70% வரை தான் கடன் தொகையாக வழங்கப்படுகிறது.
















