பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

கொழும்பு, பிப். 16- ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்த இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. சல்​மான் அலி ஆகா வீசிய முதல் ஓவரில் 4 பந்​துகளை சந்​தித்த அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் மிட் ஆன் திசை​யில் ஷாகின் ஷா அப்​ரிடி​யிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய திலக் வர்மா நிதான​மாக விளை​யாடி​னார். ஷாகின் ஷா அப்​ரிடி வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களை விரட்​டி​னார். இந்த ஓவரில் 15 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. சல்​மான் அலி ஆகா வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்​டரி விரட்ட இந்த ஓவரில் 9 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. சைம் அயூப் வீசிய 4-வது ஓவரில் 5 ரன்​களை மட்டும் விட்​டுக்​கொடுத்​தார். அப்​ரார் அகமது வீசிய 5-வது ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்​டரி விரட்ட இந்த ஓவரில் 11 ரன்​கள் எடுக்​கப்​பட்​டன. அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்​டரி​கள் அடிக்க பவர்​பிளே முடி​வில் இந்​திய அணி 52 ரன்​கள் சேர்த்​தது. அப்​ரார் அகமது வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷன் 3 பவுண்​டரி​களை விரட்​டி​னார். மட்​டையை சுழற்​றிய இஷான் கிஷன் 27 பந்​துகளில் அரை சதம் விளாசி​னார். ஷதப் கான் வீசிய 8-வது ஓவரில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரியை விளாசி அசத்​தி​னார் இஷான் கிஷன். இந்த ஓவரில் 17 ரன்​கள் குவிக்​கப்​பட்​டன. அதிரடி​யாக விளை​யாடிய இஷான் கிஷன் 40 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​கள் எடுத்த நிலை​யில் சைம்அயூப் பந்​தில் போல்​டா​னார்.