ஐக்கிய அரபு அமீரகத்தை வென்ற ஆப்கன்

புதுடெல்லி, பிப். 17- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள ஆப்கானிஸ்​தான் – ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்​கிய அரபு அமீரகம் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 160 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரர்​களான ஆர்​யன்ஷ் சர்மா 0 ரன்​களில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்தி​லும், கேப்​டன் முகமது வசீம் 10 ரன்​களில் முஜீப் உர் ரஹ்மான் பந்​தி​லும் நடையை கட்​டினர். 3-வது விக்​கெட்​டுக்கு இணைந்த அலிஷான் ஷராஃபு, சோஹைப் கான் ஜோடி சீர​ராக ரன்​கள் சேர்த்​தது. 84 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முஜீப் உர் ரஹ்​மான் பிரித்தார். அலிஷான் ஷராஃபு 31 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 40 ரன்​கள் எடுத்த நிலை​யில் முஜீப் உர் ரஹ்​மான் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அப்​போது ஐக்​கிய அரபு அமீரகம் 11.2 ஓவர்​களில் 97 ரன்​கள் எடுத்​திருந்​தது.
இதன் பின்​னர் அந்த அணி ஆட்​டம் கண்​டது. சையது ஹைதர் 13, ஹர்​ஷித் கவுசிக் 0 ரன்​களில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்​தில் வெளி​யேறினர். முகமது அர்ஃ​பான் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ரஷித் கான் பந்​தில் ‘ஹிட்விக்கெட்’ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். தனது 2-வது அரை சதத்தை கடந்த சோஹைப் கான் 48 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​கள் எடுத்த நிலை​யில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்​தில் வெளியேறி​னார்.
இதைத் தொடர்ந்து ஹைதர் அலி 13, ஜூனைத் சித்​திக் 3 ரன்​களில் ரன்​ அவுட் ஆனார்​கள். ஆப்கானிஸ்​தான் அணி தரப்​பில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 4 ஓவர்​களை வீசி 15 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்கெட்​களை வீழ்த்​தி​னார். முஜீப் உர் ரஹ்​மான் 2, ரஷித் கான் ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 161 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த செய்த ஆப்கானிஸ்தான் 19.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்புக்கு 162 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.