போராடி வீழ்ந்தது இத்தாலி அணி சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது இங்கிலாந்து

கொல்கத்தா: பிப்ரவரி 17-
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று ‘சி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான இங்கிலாந்து, அறி​முக அணி​யான இத்தாலியுடன் மோதி​யது.
முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 202 ரன்​கள் குவித்​தது. ஆல்​ர​வுண்​ட​ரான வில் ஜேக்ஸ் 22 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 53 ரன்​கள் விளாசி​னார். பில் சால்ட் 28, ஜாஸ் பட்​லர் 3, ஜேக்​கப் பெத்​தேல் 23, டாம் பேன்​டன் 30, கேப்​டன் ஹாரி புரூக் 14, சேம் கரண் 25, ஜேமி ஓவர்​டன் 15 ரன்​கள் சேர்த்​தனர். இத்தாலி அணி சார்​பில் கிராண்ட் ஸ்டூவர்ட், கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.
203 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இத்​தாலி அணி ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை பறி​கொடுத்​தது. அந்​தோணி மோஸ்​கா, ஜேஜே ஸ்மட்ஸ் ரன் ஏதும் எடுக்​காமல் நடையை கட்​டினர். இதையடுத்து
களமிறங்​கிய கேப்​டன் ஹாரி மானெண்டி 12 ரன்​களில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.
4-வது விக்​கெட்​டுக்கு ஜஸ்​டின் மோஸ்கா​வுடன் இணைந்த பென் மானெண்டி இங்​கிலாந்து பந்​து​வீச்சை பதம் பார்த்தார். அவரது அதிரடி​யால் இத்​தாலி அணி 11.3 ஓவர்களில் 100 ரன்​களை குவித்​தது. மட்​டையை சுழற்​றிய பென் மானெண்டி 25 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளு​டன் 60 ரன்​கள் விளாசிய நிலை​யில் வில் ஜேக்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். டி20 உலகக் கோப்​பை​யில் நேற்று இத்​தாலி அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி​யின் வில் ஜேக்ஸ் தனது அரை சதத்தை 21 பந்​துகளில் அடித்​திருந்​தார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த இங்​கிலாந்து வீரர் என்ற பெரு​மையை பெற்​றார். இதற்கு முன்​னர் கடந்த 2012-ம் ஆண்டு உலகக் கோப்​பை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக இயன் மோர்​கன் 25 பந்​துகளி​லும், 2021-ம் ஆண்டு உலகக் கோப்​பை​யில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதிராக ஜாஸ் பட்​லர் 25 பந்​துகளி​லும் அரை சதம் அடித்து இருந்​தனர்.