வீரர்களை விடுவிக்க பிஎல்ஏ கெடு

குவெட்டா: பிப்ரவரி 17-
​பாகிஸ்​தான் ராணுவத்​தைச் சேர்ந்த 17 வீரர்​களை சிறைபிடித்​துள்​ள​தாக​வும், அவர்​களில் 10 பேரை விடு​வித்​து​விட்​டு, எஞ்​சிய 7 பேரை விடுவிக்க கைதி​கள் பரி​மாற்​றத்​திற்கு ஒரு வாரம் காலக்​கெடு விதித்​துள்​ள​தாக​வும் பலூச் விடு​தலை ராணுவம் (பி.எல்​.ஏ.) நேற்று தெரி​வித்​துள்​ளது.
இதுதொடர்​பாக அந்த அமைப்​பின் ஊடகப் பிரி​வான ‘ஹக்​கல்’ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: “சிறைபிடிக்​கப்​பட்ட பாகிஸ்​தான் ராணுவத்​தினரில் 10 பேர் பலூச் இனத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தா​லும், அவர்​கள் உள்​ளூர் காவல் பணி​களில் ஈடு​பட்​டிருந்​தவர்​கள் என்​ப​தா​லும், அவர்​களுக்கு உரிய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்டு விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர்.
இந்த நிலப்​பரப்​பின் எதார்த்த சூழல் மற்​றும் பலூச் மக்​களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. விடுவிக்​கப்​ப​டாத எஞ்​சிய 7 பேரும் பாகிஸ்​தான் ராணுவத்​தின் வழக்​க​மான பிரிவுகளைச் சேர்ந்​தவர்​கள். அவர்​கள் மீது ‘பலூச் தேசிய நீதிமன்றத்​தில்’ விசா​ரணை நடத்​தப்​பட்​டது.
அப்​பாவி மக்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யது, பலூச் இளைஞர்​கள் மாய​மான​தில் உடந்​தை​யாக இருந்​தது மற்​றும் இனப்​படு​கொலை உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​கள் அவர்​கள் மீது சுமத்​தப்​பட்​டுள்​ளன. விசா​ரணை​யின் போது அவர்​கள் தரப்பு விளக்​கத்​தைப் பதிவு செய்த பின்​னரே, அவர்​கள் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பளிக்கப்பட்டது.