ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: பிப்ரவரி 18-
தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் வரவுள்ள நிலை​யில், தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி டெல்லி சென்றுள்ளார். மத்​திய அமைச்சர் அமித் ஷாவை சந்​தித்து தமிழக அரசி​யல் நில​வரம் குறித்து ஆலோ​சனை நடத்​தவுள்​ளார்.
ஆளுநர் ஆர்​.என்​.ரவிக்கும், முதல்வர் மு.க.ஸ்​டா​லினுக்​கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு​கிறது. ஆளுநர் பங்​கேற்​கும் பட்​டமளிப்பு விழாக்​களை அமைச்​சர்​கள் தொடர்ந்து புறக்​கணித்து வரு​கின்​றனர்.
இதற்​கிடை​யில், ஜன.20-ம் தேதி சட்​டப்​பேரவை கூட்​டத் ​தொடரில் அரசு தயாரித்த உரையை வாசிக்​காமல் ஆளுநர் வெளி​யேறினார். ஆளுநருக்​கும், முதல்​வருக்​கும் இடையே மோதல் போக்கு நில​வும் இந்த பரபரப்​பான சூழ லில் ​தேர்​தல் வரவுள்​ளது.
இந்​நிலை​யில், ஆர்​.என்​.ரவி நேற்று விமானம் மூலம் 3 நாள் பயணமாக டெல்லி சென்​றார். 19-ம் தேதி சென்னை திரும்​பவுள்​ளார்.
டெல்​லி​யில் உள்​துறை அமைச்​சர் அமித் ஷா உள்​ளிட்​டோரை சந்​தித்து தமிழக அரசி​யல் நில​வரம் குறித்து பேச இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.