
டெல்லி: பிப்ரவரி 18-
டெல்லியில் ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ எனும் தலைப்பில் ஏஐ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இதில் சீன தயாரிப்பு ரோபோட் நாய் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்த ரோபோட்டை தாங்கள்தான் உருவாக்கினோம் என இந்திய பல்கலைக்கழகம் தரப்பில் உரிமை கோரப்பட்டிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. இதற்கு பல்கலைக்கழகம் அளித்த விளக்கமும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
ஏஐ மாநாடு அதாவது, டெல்லியின் பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு பிப்.16 அன்று தொடங்கியது. 5 நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டின் ஒரு பகுதியாக ‘இந்தியா AI எக்ஸ்போ 2026’ எனும் கண்காட்சி தொடங்கியது. மோடிதான் இதனை தொடங்கி வைத்தார். இதில்தான் சீன ரோபோட் நாய் காட்சிப்படுத்தப்பட்டது. ரோபோட் நாய் இதனை ‘கல்கோடியாஸ்’ பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியிருந்தது.
இந்த ரோபோட் நாய்க்கு ‘ஓரியன்’ என பெயரிடப்பட்டிருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டிதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய தயாரிப்பு அவர் பேசியதாவது,
“நாங்கள் இங்கே ஓரியன் என்கிற ரோபோவை காட்சிப்படுத்தியிருக்கிறோம். இது எங்கள் பல்கலைக்கழகத்தின் ‘center of excellence’ குழுவினரால் முழுமையாக உருவாக்கப்பட்டது. இது ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதில் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மனிதர்களை பின் தொடரவும், அவர்கள் கொடுக்கும் கட்டளைகளை ஏற்கவும் முடியும். இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” என பேசியிருந்தார்.















