21 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: பிப்ரவரி 18- ​
விழுப்​புரம் மாவட்​டம் கிளியனூர் பஞ்​சா​யத்து தலை​வர் பதவிக்​கான தேர்​தல் முன்​விரோதத்​தில் பெட்​டிக்​கடைக்​காரரை கொலை செய்த வழக்​கில் விடுவிக்​கப்பட்ட, முன்​னாள் பஞ்சா​யத்து தலைவி மற்​றும் அவரது மகன்​கள் உள்​ளிட்ட 21 பேருக்கு உயர் நீதி​மன்​றம் ஆயுள் தண்​டனை விதித்​துள்​ளது.
கிளியனூர் அரு​கே​யுள்ள காட்​ராம்​பாக்​கத்​தைச் சேர்ந்த முன்​னாள் பஞ்​சா​யத்து தலை​வர்​களான கிருஷ்ணவேணி தரப்​புக்​கும், வில்​வ​மணி தரப்​புக்​குமிடையே தேர்​தல் முன்​விரோதம் இருந்​துள்​ளது. இந்​நிலையில், அங்கு பெட்​டிக்​கடை நடத்தி வந்த பாஸ்​கர் என்​பவர், வில்​வ​மணிக்கு ஆதர​வாக வேலை செய்​துள்​ளார்.
ஆனால், தேர்​தலில் கிருஷ்ணவேணி வெற்றி பெற்​று, மீண்​டும் பஞ்​சா​யத்து தலை​வ​ராக பதவி​யேற்​றார். 2013 மே 29-ம் தேதி வில்​வ​மணி தலை​மை​யில், கிராமத்​தில் உள்ள கோயி​லில் பாஸ்​கர் திரு​விழாவை நடத்​தி ​உள்​ளார்.
இதில் ஆத்​திரமடைந்த கிருஷ்ணவேணி மற்​றும் அவரது மகன்​கள் மதன்​ராஜ், மதன்​குமார் மற்​றும் உறவினர்​கள் காத்​த​முத்​து, பார்த்​திபன், ராணி, மூர்த்தி என்ற கிருஷ்ண​மூர்த்​தி, மாரி​முத்​து, சுரேஷ், ஜெய​ராஜ், குமார், முரளி, தாஸ் என்ற சிவப்​பிர​காசம், ஜனார்த்​தனன், சிவக்​கு​மார், ஜெயசேகர், வீரமணி, வேலு, ஜெய​காந்​தன், வினோத்​கு​மார், கருணாநி​தி, ஞான​சேகரன், ராம​தாஸ் ஆகிய 23 பேரும், திரு​விழா முடிந்து வீட்​டில் இருந்த பாஸ்​கரை கத்​தி​யால் குத்​தி​யும், இரும்பு கம்​பி​யால் தாக்​கி​யும் கொலை செய்​துள்​ளனர்.
இதுதொடர்​பாக கிளியனூர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, கிருஷ்ணவேணி உள்​ளிட்ட 23 பேரை​யும் கைது செய்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த திண்​டிவனம் கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம், கொலைக் குற்றம் நிரூபிக்கப்​ பட​வில்லை என்று கூறி, 2017-ல் 23 பேரை​யும் விடு​வித்தது.
இதை எதிர்த்து அமுதா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் அமர்​வில் நடந்​தது.
காவல் துறை தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜரானார்.மேல்​முறை​யீட்டு மனு​தா​ர​ரான அமுதா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எஸ். சுரேஷ், இந்த கொலை​யில் ஈடு​பட்​டது தாங்​கள்​தான் என கிருஷ்ணவேணி மகன்​களே முன்​வந்து வாக்குமூலம் அளித்​துள்​ளனர்.
இந்​தக் கொலை மனு​தா​ரரின் எதிரிலேயே நடந்​துள்​ளது. அவரும் சாட்​சி​யம் அளித்​துள்​ளார். ஆனால், வழக்​கில் இருந்து அனை​வரும் விடு​தலை செய்​யப் ​பட்​டனர்” என்றார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட அனை​வரை​யும் குற்​ற​வாளி​கள் என்று தீர்​மானித்​து, திண்​டிவனம் அமர்வு நீதி​மன்​றத் தீர்ப்பை ரத்து செய்தனர்.