
பீஜிங்: பிப்ரவரி 18-
ஆசியாவில் ஒரு பெரிய அண்ணன் போல செயல்பட வேண்டும் என்று செயல்பட்டு வரும் சீனா அவ்வப்போது இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சீனா அணு ஆயுத கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று சீனா. ஆசியாவில் பெரும் வல்லாதிக்க நாடாக வேண்டும் என்ற கனவுடனும், சர்வதேச அளவில் அமெரிக்காவை விஞ்ச வேண்டும் என்றும், கனவு கண்டு வரும் சீனாவுக்கு பெரும் தலைவலியாக இருப்பது இந்தியாதான்.
ஆசியாவில் ஒரு பெரிய அண்ணன் போல செயல்பட வேண்டும் என்ற தனது திட்டத்திற்கு இந்தியா தடையாக இருப்பதால் இந்தியா மீது எப்போதுமே எரிச்சலை காட்டி வருகிறது சீனா. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்திற்கு தடை போடும் ஒரே நாடாக இந்தியா இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது தனது நரித்தனத்தை சீனா செய்து விடுகிறது. இருந்தாலும் இந்தியா, இதனை சாதுர்யமாக கையாண்டு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு செக் வைக்கும் திட்டத்துடன் இருக்கும் சீனா, இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளையும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி அடாவடி செய்கிறது.
குறிப்பாக இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமான அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என்று சொல்லிக்கொண்டு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவின் இந்த அடாவடி செயலுக்கு இந்தியாவும் தேவையான நேரத்தில் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. ஆனாலும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா, குடியிருப்புகளையும் அமைத்து இந்தியாவின் எல்லையோர பாதுகாப்புக்கு சவால் விடுத்து வருகிறது. இதனை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த சூழலில் மற்றொரு திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் அணு ஆயுத கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. செயற்கைகோள் படங்களை ஆய்வு செய்ததில் இந்த விவரங்களை நிபுணர்கள் கண்டறிந்து இருப்பதாக பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் அணு தொடர்புடைய வளாகங்கள் ரகசியமாக வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்த வளாகங்கள் அணு ஆயுத உற்பத்தி மற்றும் அணு ஆயுத சோதனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தனது அணு ஆயுத தளவாடங்களை சீனா அதிகரித்துவதாக தகவல் வெளியாகக்கூடிய நிலையில், மேற்கொண்ட செய்தி வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.













