
பெங்களூர், பிப். 18- கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதாகப் பலரும் புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி நெட்டிசன் பதிவிட்டு ஒரு ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூருக்கு வந்து ஒரே வாரத்தில் தனக்கு ரூ.30 ஆயிரம் செலவாகி இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவின் ஐடி தலைநகராக பெங்களூர் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதனால் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பெங்களூரில் குடியேறி வருகிறார்கள். அதேநேரம் பெங்களூரில் செலவுகளும் அதிகரித்து வருகிறது. இதனால் சராசரி சம்பளம் வாங்கும் ஒருவர் வாழவே மிகவும் சிரமப்படும் நகரமாக பெங்களூர் மாறியுள்ளது.
புலம்பிய நெட்டிசன்கள்
இதற்கிடையே பெங்களூரில் புதிதாகக் குடியேறிய ஒருவர், முதல் ஒரு வாரம் தனக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருக்கு வந்தது முதலே தனக்கு அதிகச் செலவு ஆகிவிட்டதாகவும் எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை என்றும் அந்த நபர் புலம்பி இருக்கிறார். கிட்டத்தட்ட ரூ.40,000 செலவு இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், “பெங்களூருக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. வாடகைக்கு ₹18 ஆயிரத்திற்கும் அதிகமாகச் செலவாகிவிட்டது. அதேபோல உணவுக்காக ₹12 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் செலவழித்தேன். பெங்களூர் நகர வாழ்க்கை மலிவானது அல்ல.. என் செலவுப் பழக்கங்களும் சரியில்லை என்றே நினைக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.













