
புதுடெல்லி பிப்ரவரி 19-
புதுடெல்லியில் இன்று ஏ ஐ செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடி இதை துவக்கி வைத்து உரையாற்றினார் இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை விபரம் வருமாற அனைவருக்குமான ஏஐ
தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானது அல்ல, அது சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் பலன் தர வேண்டும் என்றார். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே AI-ன் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள ‘இந்தியா ஏஐ மிஷன்’ பற்றி அவர் விளக்கினார்.
இதன் மூலம் சூப்பர் கம்ப்யூட்டிங் திறன் மேம்படுத்தப்படும்.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குத் தேவையான தரவுகள் எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும்.இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு
தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்களான ‘டீப்ஃபேக்’ மற்றும் தவறான தகவல்கள் பரவுவது குறித்து கவலை தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒரு வரம்பிற்குள் கொண்டு வர சர்வதேச அளவில் ஒருமித்த பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.மனித விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏஐ இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்கல்வி மற்றும் சுகாதாரம்
கல்வி: மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு உதவியாகவும்
ஏஐ பயன்படுத்த வேண்டும்.
சுகாதாரம்: கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உயர்தர மருத்துவ ஆலோசனைகளை மூலம் கொண்டு செல்ல முடியும்.
விவசாயம்: பயிர் பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் சந்தை நிலவரங்களை விவசாயிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள AI பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள்
இந்தியா உலக அளவில் திறமையாளர்களின் மையமாக மாறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இளைஞர்கள் வெறும் பயனர்களாக மட்டும் இல்லாமல், உலகிற்கே தீர்வுகளை வழங்கும் படைப்பாளர்களாக மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டார்















