இந்தியா ஏஐ உச்சி மாநாடு: சுந்தர் பிச்சை உடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

புதுடெல்லி, பிப். 19 டெல்​லி​யில் நடை​பெறும் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்​டில் பங்​கேற்க வந்​துள்ள கூகுள் சிஇஓ சுந்​தர் பிச்​சை​யும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் சந்​தித்​துப் பேசினர். அப்போது ஏஐ கண்​டு​பிடிப்பு மற்​றும் திறன் மேம்​பாடு குறித்து ஆலோ​சனை நடத்​தினர். இந்​தியா ஏஐ உச்சி மாநாடு 2026 டெல்​லி​யில் நடை​பெற்று வருகிறது. இதில் 110-க்​கும் மேற்​பட்ட நாடு​களைச் சேர்ந்த தகவல் தொழில்​ நுட்​பத் துறை சார்ந்த நிறு​வனங்​கள் மற்​றும் 30 சர்​வ​தேச அமைப்​பு​கள் பங்​கேற்​கின்​றன. இதில் சுமார் 20 நாட்​டுத் தலைவர்கள் மற்​றும் 45 அமைச்​சர்​கள் கலந்து கொள்​வது, ஏஐ தொழில்​ நுட்​பத்​தின் பொறுப்​பான வளர்ச்சி மற்​றும் பயன்பாட்டில் சர்​வ​தேச ஒத்​துழைப்​பின் அவசி​யத்தை உணர்த்துகிறது.இந்த ஏஐ உச்சி மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக கூகுள் நிறுவனத்தின் தலை​மைச் செயல் அதி​காரி (சிஇஓ) சுந்​தர் பிச்சை இந்​தியா வந்​துள்​ளார். இந்த மாநாட்​டில் வரும் 20ம் தேதி அவர் உரை​யாற்ற உள்​ளார். இந்​நிலை​யில், டெல்​லி​யில் உள்ள ஹைதராபாத் இல்​லத்​தில் சுந்​தர் பிச்​சை​யும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று சந்​தித்​துப் பேசினர். இந்​தச் சந்​திப்​பின் முக்​கிய அம்​சங்​களை பிரதமர் அலு​வல​கம் தனது அதி​காரப்​பூர்வ யூடியூப் பக்​கத்​தில் பகிர்ந்​துள்​ளது. இந்த வார தொடக்​கத்​தில் இந்​தியா வந்​தடைந்த சுந்​தர் பிச்​சை, தனக்கு அளிக்​கப்​பட்ட உற்​சாக​மான வரவேற்​புக்கு நன்றி தெரி​வித்​தார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்​தில்,”ஏஐ உச்சி மாநாட்​டுக்​காக மீண்​டும் இந்​தியா வந்​திருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. எப்​போதும் போல ஒரு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. உச்சி மாநாட்டின் ஆய்​வறிக்​கைகளும் மிகச் சிறப்​பாக இருந்​தன” எனப் பதி​விட்​டுள்​ளார். இந்​தச் சந்​திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்​தில், ”சுந்​தர் பிச்​சை​யுட​னான சந்​திப்பு மிக​வும் மகிழ்ச்சி அளிப்​ப​தாக இருந்​தது. இந்​தி​யா​வின் ஏஐ கண்​டு​பிடிப்​பு​கள் மற்​றும் திறன் மேம்பாடு குறித்து அவருடன் விவா​திக்​கப்​பட்​டது. செயற்கை நுண்ணறி​வுத் துறை​யில் இந்​தி​யா​வின் திறமை​யான மாணவர்கள் மற்​றும் இளம் நிபுணர்​களு​டன் கூகுள் நிறு​வனம் இணைந்து செயல்​படு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது” என ப​தி​விட்​டுள்​ளார்​.