
புவனேஸ்வர், பிப். 19- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள் மஹ்ரூப் அகமது கான் மற்றும் மஸ்ரூர் அகமது கான். இரட்டையர்களான இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் சேர உதவும் ஜேஇஇ தேர்வை இருவரும் எழுதியிருந்தனர். இந்த ஜேஇஇ பிரதானத் முடிவுகள் வெளியான நிலையில் மஹ்ரூப், மஸ்ரூர் இருவரும் 300-க்கு 285 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளனர். வாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த இவர்கள் தற்போது ஜேஇஇ தேர்விலும் ஒரே மதிப் பெண்ணைப் பெற்று உயர்கல்வி நிலையத்தில் சேரவுள்ளனர்.

















