இண்டியா கூட்டணியை மம்தா, ஸ்டாலின் வழிநடத்த சிவசேனா (உத்தவ்) கட்சி ஆதரவு

மும்பை, பிப். 19- சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் அதி​காரப்​பூர்வ ‘சாம்​னா’ நாளிதழில் ஒரு தலை​யங்​கம் வெளி​யாகி​யுள்​ளது. அதில், “காங்​கிரஸ் மற்​றும் தேசத்​தின் உச்ச தலை​வ​ராக மகாத்மா காந்தி இருந்​தார். காந்​திக்கு ஒரு உள் குரல் இருந்​தது. அது, அவரது முடிவு​களை வழி நடத்​தி​யது. ஆன்​மீகம், தேச பக்தி மற்​றும் தன்னலமின்​மை​யால் அம்​முடிவு​கள் கூர்​மைப்​படுத்​தப்​பட்​டன.
இன்​று, காங்​கிரஸுக்​குள் பல ‘உள் குரல்​கள்’ உரு​வாகி குழப்பத்தை ஏற்படுத்​துகின்​றன. இது நாட்​டுக்கு ஆரோக்கியமானது அல்ல. தமிழகம் உட்பட 5 மாநிலங்​களில் தேர்தல் நெருங்கி வரும் வேளை​யில் இந்த உள் குரல்​கள் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்​ளன. மணி சங்​கர் அய்​யர், சஞ்சய் பாரு உள்ளிட்டோரின் கருத்​துகள் சிரம​மான நேரத்​தில் வெளிவந்​து, காங்​கிரஸ் விவ​காரங்​களை சிக்​கலாக்​கு​கின்​றன” என கூறப்பட்டுள்​ளது.