
காபூல், பிப். 19- குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது என்ற ஆப்கானிஸ்தானில் புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே அங்கு கடுமையான சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மனைவியை கணவர்கள் அடிக்கலாம் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதிலும் பெண்கள் உயர் கல்வி கற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், கணவன்மார்கள் மனைவியை வீட்டில் அடிப்பது சட்டப்பூர்வமாக்கியுள்ளது தாலிபான் அரசு. குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது என்ற புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் ஒருவேளை மனைவியை அடித்ததில் அவருக்கு கண்ணுக்கு தெரியும் படியான காயங்கள் ஏற்பட்டு இருந்தால் கணவன்களுக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுமாம். அதேநேரத்தில் தனக்கு எதிராக துன்புறுத்தல் நடைபெற்றது என்பதை பெண்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். தனது உடலில் காயம் ஏற்பட்ட இடத்தை மட்டும் நீதிபதியிடம் பெண்கள் காட்ட வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறதாம். தனது உடலில் மீதமுள்ள பகுதியை முழுவதும் ஆடையால் மறைத்துவிட்டு காயம் ஏற்பட்ட இடத்தை மட்டுமே காட்ட வேண்டும் எனவும், அந்த நேரத்தில் தனது கணவர் அல்லது ஆண் துணை ஒருவர் நீதிமன்றத்தில் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


















