கோயில் விழா அழைப்பிதழில் சாதி பெயர் கூடாது:

சென்னை: பிப்ரவரி 21
கோயில் ​திரு​விழாக்​களுக்​கான அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயரில் சாதி பெயர் இடம்​பெறக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​வு பிறப்பித்துள்​ளது.திருப்​போரூர், கந்​தசு​வாமி கோயில் மாசி பிரம்​மோற்சவ விழாவுக்​கான அழைப்​பிதழில் சாதிப் பெயர்​களை பயன்​படுத்த தடை விதிக்​கக் கோரி திருப்​போரூரை சேர்ந்த சமரன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார்.இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி டி.பரத சக்​கர​வர்த்​தி, விழா அழைப்​பிதழில் உபய​தா​ரர்​களின் பெயர்​கள் சாதிப் பெயருடன் இடம் பெற்​றுள்​ளதைக் குறிப்​பிட்​டு, அறநிலை​யத்துறை நடத்​தும் விழா​வில், சாதி பெரு​மையை ஊக்​கு​விப்​பதை அனு​ம​திக்க முடி​யாது.
அடுத்த விழாக்​களின்​போது அச்​சிடப்​படும் அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயர்​கள் மட்​டுமே இடம் பெற வேண்​டும். சாதி பெயர்​கள் இடம்பெறக் கூடாது என உத்​தர​விட்​டு,வழக்கை முடித்து வைத்​துள்​ளார்.மேலும், அந்த உத்​தர​வில், பிறப்​பொக்​கும் எல்லா உயிர்க்​கும் என சொல்​லும் நிலை​யில், பிறப்​பால் மட்​டுமே சாதி வரு​கிறது. பிறப்பு மட்​டுமே மக்​களை பிளவுபடுத்​துகிறது. நாட்​டில் சாதியை ஒழிக்க ஒவ்​வொரு அதி​காரி​களும் முயற்​சிக்க வேண்​டுமே தவிர, அதை பெரிதுபடுத்​தக் கூடாது எனவும் நீதிப​தி அறி​வுறுத்​தி​யுள்​ளார்​.