அதிபர் ட்ரம்ப் கொள்கைகள் மீது 60% பேர் அதிருப்தி

வாஷிங்டன்: பிப்ரவரி 23-
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொள்​கைகள் மீது 60 சதவீதம் பேர் அதிருப்தி கொண்​டிருப்​ப​தாக ஓர் ஆய்​வில் தெரியவந்​துள்​ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலை​மையி​லான அரசின் கொள்கைகள் குறித்து ஏபிசி நியூஸ், வாஷிங்​டன் போஸ்ட் ஆகியவை இப்​சோஸ் நிறு​வனத்​தின் அறி​வுத்​திறன் குழுவினருடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்​தி​யது.அமெரிக்காவின் பண வீக்​கம், மற்ற நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​குமதி வரி, வெளி​நாட்டு உறவு​கள் மேலாண்மை ஆகிய பிரிவு​களில் இந்த கருத்​துக்​கணிப்பு அமெரிக்க மக்​களிடம் நடத்​தப்​பட்​டது.
இந்த ஆய்​வு​களின் முடி​வில் பெரும்​பாலான மக்​கள் அமெரிக்க அதிபரின் கொள்​கைகள் மீது அதிருப்தி அடைந்​துள்​ளனர் என்று தெரிய​வந்​துள்​ளது.
ஒட்​டுமொத்​த​மாக 60 சதவீதம் பேர் ட்ரம்ப்​பின் கொள்​கைகளை விரும்​ப​வில்லை. இந்த ஆய்​வானது, அதிபர் விதித்த வெளி​நாட்டு பொருட்​கள் மீதான வரியை, அமெரிக்க நீதிமன்​றம் ரத்து செய்​வதற்கு சற்று முன்​பாக நடத்​தப்​பட்​டது.அதிபர் ட்ரம்ப், பண வீக்​கத்​தைக் கையாளும் விதத்தை 3 அமெரிக்கர்​களில் 2 பேர் ஏற்​க​வில்லை. 10 பேரில் ஆறு பேர் இறக்குமதி செய்​யப்​பட்ட பொருட்​களின் மீதான வரி​கள் விவகாரத்​தில் அவர் கையாளும் விதத்​தை​யும் விரும்​ப​வில்​லை.
குடியேற்​றம் தொடர்​பான ட்ரம்ப்​பின் கொள்​கைகளை 58 சதவீத மக்கள் எதிர்த்​துள்​ளனர். அதே​போல் 57% பேர் ஒட்​டுமொத்​த​மாக பொருளா​தா​ரக் கொள்​கைகள் விவ​காரத்​தில் அதிபர் ட்ரம்ப் கையாளும் விதத்​தை​யும் ஏற்​க​வில்லை என ஆய்​வில் தெரியவந்துள்​ளது.மேலும், வெளி​நாட்டு உறவு​கள் விவ​காரத்​தில் அவர் கையாளும் விதத்தை 62% பேர் ஏற்​க​வில்​லை. அதே​போல், நாட்​டின் மிகப்​பெரிய பிரச்​சினை​களைத் தீர்க்க யாரை அதி​கம் நம்​பு​கிறார்​கள் என்று கேட்​ட​போது, பொது​மக்​களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று 33% பேரும், ஜனநாயகக் கட்​சி என்று 31% பேரும், ‘இரண்டு பேருமே இல்​லை’ என்று 31% பேரும் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.