திமுக – காங். தொகுதி பங்கீடு: ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் ஆலோசனை

சென்னை: பிப்ரவரி 23-
சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லினை காங்​கிரஸ் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் நேற்று சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.
கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் 25 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் கட்சி 18 இடங்​களில் வென்​றது. ஆனால், இந்த முறை “ஆட்​சி​யில் பங்​கு, கூடு​தல் தொகு​தி​கள் என கட்சி நிர்​வாகி​கள் மாணிக்​கம் தாகூர், பிர​வீன் சக்​கர​வர்த்தி போன்​றோர் போர்க்​கொடி தூக்​கினர். இதற்கு திமுக தரப்​பிலிருந்​தும் பதிலடிகள் வர, கூட்​ட​ணிக்​குள் விரிசல் விழுமோ என்ற பதற்​றம் நில​வியது.
இந்​தச் சூழலில் சென்னை வந்த காங்​கிரஸ் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் கே.சி. வேணுகோ​பால், “தி​முக – காங்​கிரஸ் கூட்​டணி உறு​தி​யாக உள்​ளது; ஆட்​சி​யில் பங்கு என்​பது காங்​கிரஸின் அதி​காரப்​பூர்வ நிலைப்​பாடு அல்ல” என விளக்​கமளித்​தார்.
இருப்​பினும், ராகுல் காந்​திக்கு தெரிந்தே இந்த சர்ச்​சையைக் கிளப்​பு​கிறார்​களோ என்ற சந்​தேகம் திமுக தலை​மைக்கு இருந்​தது. இதைத் தொடர்ந்து வேணுகோ​பால் பலமுறை முயன்​றும், ஸ்டா​லினுட​னான சந்​திப்பு தள்​ளிப்​போய்க் கொண்டே போனது.
இந்​நிலை​யில் திடீர் திருப்​ப​மாக நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்த கே.சி.வேணுகோ​பால் ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள முதல்​வர் இல்​லத்​தில் ஸ்டா​லினை சந்​தித்​துப் பேசி​னார்.
இதில் கனி​மொழி எம்​.பி. மற்​றும் சத்​தீஸ்​கர் மாநில முன்​னாள் துணை முதல்​வர் சிங் தியோ ஆகியோர் மட்​டுமே பங்​கேற்​றனர். சந்​திப்​பின்​போது ராகுலிடம் ஸ்டா​லின் தொலைபேசி​யில் பேசி​யுள்​ளார்.
இந்​தச் சந்​திப்​பில், முதல்​வர் இல்​லத்​தில் தயார் செய்​யப்​பட்ட உணவை அருந்​தி​யபடியே தொகு​திப் பங்​கீடு குறித்து விவா​திக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.
இதுகுறித்து காங்​கிரஸ், திமுக கட்​சிகளின் மூத்த தலை​வர்​கள் சிலர் கூறிய​தாவது: மாணிக்​கம் தாகூர் எம்​.பி., நிர்​வாகி பிர​வீன் சக்​கர​வர்த்தி ஆகியோரின் விமர்​சனங்​கள் எல்லை மீறிச் செல்​வ​தாக​வும், இவ்​வளவு கசப்​பு​களுக்​குப் பிறகு கூட்​ட​ணி​யைத் தொடர வேண்​டுமா என்​றும் அமைச்​சர்​கள் பலரே முதல்​வரிடம் கேள்வி எழுப்​பினர்.
அதற்கு ஸ்டா​லின், ‘தேர்​தல் நேரத்​தில் நமக்​குச் சட்​டரீ​தி​யாக​வும், அரசி​யல் ரீதி​யாக​வும் பல முட்​டுக்​கட்​டைகள் வர வாய்ப்​புள்​ளது.
அதை நாடாளு​மன்​றத்​தில் எதிர்த்​துப் பேசுவதற்கு காங்​கிரஸின் பலம் நமக்கு அவசி​யம் தேவை எனக் கூறி​னார்.
இதனைத் தொடர்ந்​து, ஸ்டா​லின் நேரடி​யாக சோனியா காந்​தியை தொடர்​பு​கொண்டு நிலை​மையை விளக்​கி​யுள்​ளார். இதையடுத்து ராகுலை அழைத்​துப் பேசிய சோனி​யா, ‘தி​முக நமக்கு இக்​கட்​டான பல நேரங்​களில் தோள் கொடுத்த கட்​சி, அவர்​களை இழப்​பது சரி​யான முடி​வாக இருக்​காது’ என கூறி​யிருக்​கிறார்.