பாக். வான்வழித் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

காபூல்: பிப்ரவரி 23-
ஆப்​கானிஸ்​தான் எல்​லைப் பகு​தி​யில் பாகிஸ்​தான் விமானப்​படை​யினர் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 18 பேர் உயி​ரிழந்​தனர்.பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே​யான எல்​லைப்​புற மோதல்​கள் கடந்த சில மாதங்​களாக அதி​கரித்து வரு​கின்​றன. தலி​பான்​கள் தலை​மையி​லான ஆப்​கானிஸ்​தானின் நங்​கர்​ஹார் மற்​றும் பாக்​டிகா மாகாணங்​களில் அடிக்​கடி பாகிஸ்​தான் விமானப்​படை வான்​வழித் தாக்​குதலை நடத்தி வரு​கிறது.
இந்​நிலை​யில் நேற்று திடீரென நங்​கர்​ஹார் பகு​தி​யில் பாகிஸ்தான் ராணுவத்​தினர் வான்​வழித் தாக்​குதலை நடத்​தினர். இந்த பயங்​கரத் தாக்​குதலில் பெண்​கள், குழந்​தைகள் உட்பட 18 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அங்​கிருந்து வரும் தகவல்​கள் தெரிவிக்கின்​றன. மேலும் 20-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் படுகாயமடைந்​துள்​ளனர்.
இது குறித்து ஆப்​கானிஸ்​தான் அரசின் செய்​தித் தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறும்​போது, “பாகிஸ்​தான் ராணுவத்தினர் நங்​கர்​ஹார் மாகாணத்​தி​லுள்ள பெஹ்சுத் மாவட்டத்​தில் ஒரு வீட்டை குறி​வைத்து நடத்​திய தாக்​குதலில் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 23 பேர் கட்​டிட இடி​பாடு​களுக்​குள் புதைந்தனர். அவர்​களில் இது​வரை 4 பேர் மட்​டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்​கைகள் தொடர்ந்து நடைபெற்று வரு​கின்​றன” என்​றார்.
தெஹ்ரிக்-இ தலி​பான் பாகிஸ்​தான் என்​றழைக்​கப்​படும் தீவிரவாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும், உளவுத்​துறை​ தகவலின் அடிப்​படை​யில் இந்​தத் தாக்​குதல் மேற்கொள்​ளப்​பட்​ட​தாக​வும் பாகிஸ்​தானைச் சேர்ந்த அமைச்​சர் அத்​தாவுல்லா தரார் தெரி​வித்​தார்.