இந்திய அணி தோற்றது எப்படி?

அகம​தா​பாத்: பிப். .23-ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதி​யது. முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. குயிண்​டன் டி காக் 6 ரன்​களில் ஜஸ்​பிரீத் பும்ரா பந்​தில் போல்​டா​னார். கேப்​டன் எய்​டன் மார்க்​ரம் 4 ரன்​களில் அர்​ஷ்தீப் சிங் பந்​தில் மிட் ஆஃப் திசை​யில் நின்ற ஹர்​திக் பாண்​டி​யா​விடம் எளி​தாக கேட்ச் கொடுத்து நடையை கட்​டி​னார். ரியான் ரிக்கெல்டன் 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் மிட் ஆஃப் திசையில் நின்ற ஷிவம் துபே​விடம் பிடி​கொடுத்து வெளியேறி​னார். 4 ஓவர்​களில் 20 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை இழந்து தென் ஆப்​பிரிக்க அணி நெருக்​கடியை சந்​தித்​தது. ஆனால் 4-வது விக்​கெட்​டுக்கு இணைந்த டேவிட் மில்​லர், டெவால்ட் பிரேவிஸ் ஜோடி தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு இந்​திய அணி​யி​யின் பந்​து​வீச்சு துறைக்கு நெருக்​கடியை கடத்தியது. வருண் சக்​ர​வர்த்தி வீசிய 5-வது ஓவரில் டேவிட் மில்​லர் 2 பவுண்​டரி​கள் விரட்ட 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. அர்​ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்​டரி​களு​டன் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன.