ஜிம்​பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா

சென்னை: பிப். 27- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பி​யான இந்​தி​யா, ஜிம்​பாப்வே அணி​கள் மோதின. அரை இறுதி வாய்ப்பை பெற வேண்​டு​மா​னால் இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யில் களமிறங்​கிய இந்​திய அணி பேட்​டிங் செய்தது. இந்​திய அணி​யில் வாஷிங்​டன் சுந்​தர், ரிங்கு சிங் ஆகியோர் நீக்​கப்​பட்டு அக்​சர் படேல், சஞ்சு சாம்​சன் சேர்க்கப்​பட்​டனர். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு சஞ்சு சாம்​சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். நரவா வீசிய 2-வது பந்​தில் சஞ்சு சாம்​சன் சிக்​ஸரும், அடுத்த பந்​தில் பவுண்​டரி​யும் விரட்​டி​னார். இதனால் முதல் ஓவரில் 13 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. முசா​ரா​பானி வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்​சன் சிக்​ஸர் விளாசி​னார். டினோடென்டா மபோசா வீசிய 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா 3 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸரை விளாசி​னார்.
சஞ்சு சாம்​சன் தனது பங்​குக்கு ஒரு பவுண்​டரி விரட்ட இந்த ஓவரில் மட்​டும் 23 ரன்​கள் குவிக்​கப்​பட்​டன. மட்​டையை சுழற்​றிய சஞ்சு சாம்​சன் 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 24 ரன்​கள் எடுத்த நிலை​யில் முசா​ரா​பானி பந்தை டீப் மிட்விக்​கெட் திசை​யில் விளாசிய போது ரியான் பரூலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்​கெட்​டுக்கு சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்மா ஜோடி 3.4 ஓவர்​களில் 48 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்​மாவுடன் இணைந்து மட்​டையை சுழற்​றி​னார். பிராடு இவான்ஸ் வீசிய 5-வது ஓவரில் அபிஷேக் சர்மா தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸர் பறக்​க​விட்​டார். ரிச்​சர்டு நரவா வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்​டரி​களை விரட்ட அபிஷேக் சர்மா கடைசி பந்​தில் சிக்​ஸர் பறக்​க​விட்​டார்.