
லக்னோ, பிப். 27- 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், அணியின் முக்கிய வீரரான ரிங்கு சிங்கின் தந்தை காசந்திர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ரிங்கு சிங்கின் தந்தை காசந்திர சிங் கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் எவ்வவளோ போராடியும், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27ஆம் தேதியான இன்று அவரது உயிர் பிரிந்தது. டி20 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியுடன் சென்னை சேப்பாக்கத்தில் இருந்த ரிங்கு சிங், தந்தையின் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக அணியிலிருந்து விலகி தனது சொந்த ஊரான அலிகாரிற்குப் புறப்பட்டுச் சென்றார்.















