விமான டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெறும் விதிகள் மாற்றம்

புதுடெல்லி: பிப்ரவரி 27-
கடந்​தாண்டு டிசம்​பரில் விமான பயணி​களிடம் இருந்து 29,212 புகார்​கள் வந்​தன. இவற்​றில் 7.5 சதவீதம் கட்டணத்தை திரும்ப பெறுவது (ரீபண்ட்) தொடர்பானவை. இதையடுத்து ரீபண்ட் விதி​முறை​களில் டிஜிசிஏ மாற்​றம் செய்துள்ளது.
இது குறித்து டிஜிசிஏ கூறி​யிருப்​ப​தாவது: விமான நிறு​வன இணையதளம் மூலம் எடுக்​கப்​பட்ட டிக்​கெட்​டில் பயணி​யின் பெயரில் திருத்​தம் இருந்​து, டிக்​கெட் வாங்​கிய 24 மணி நேரத்துக்குள் திருத்​தம் செய்​யப்​பட்​டால் கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்க கூடாது. டிராவல் நிறுவன ஏஜென்ட் அல்​லது இணையதளம் மூலம் டிக்​கெட் வாங்​கப்​பட்​டாலும், பணத்​தைத் திருப்​பிச் செலுத்​தும் பொறுப்பு விமான நிறு​வனங்​களுக்கே உள்ளது. 14 நாட்​களுக்​குள் ரீபண்ட் செலுத்​தப்பட வேண்​டும். மருத்​துவ அவசரம் காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனுமதியாகும் பயணி​கள் டிக்​கெட் ரத்து செய்​தால், கட்டணத்தை திருப்​பிச் செலுத்த வேண்​டும். விமான டிக்​கெட் வாங்​கிய பின் பயணி​கள் , கூடு​தல் கட்​ட​ணமின்றி திருத்​தங்​கள் மற்றும் மாற்​றங்​கள் செய்ய 48 மணி நேரம் அவகாசம் வழங்​கும்​படி விமான நிறு​வனங்​களிடம் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.ஆனால் இந்த வசதி, உள்​நாட்டு விமான போக்​கு​வரத்​தில், பயண தேதி ஒரு வாரத்​துக்கு குறை​வாக இருந்​தால் கிடைக்​காது. வெளி​நாட்​டுப் பயணம் என்​றால் பயண தேதி 15 நாட்​களுக்கு குறை​வாக இருந்​தால் இந்த வசதியை பெற முடி​யாது. இவ்​வாறு டிஜிசிஏ தெரி​வித்​துள்​ளது.