
பெங்களூர்: பிப்ரவரி 27-
கர்நாடகாவில் தன்னைத்தானே சாமியார் என்று கூறி கொள்ளும் ஒருவர் 7 வயது சிறுமியை தூக்கி தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதையடுத்து அந்த சாமியார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாகாபூர் தாலுகா கோகி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வசித்து வருபவர் மல்லிகார்ஜுன முட்டவா.
இவர் தன்னை தானே சாமியார் என்று கூறி வருகிறார். இவர் அங்குள்ள கோவிலில் இருப்பதோடு, அங்கு வரும் மக்களுக்கு ஆசி வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தான் மகாராஷ்டிராவை சேர்ந்த தம்பதி தனது 7 வயது மகளுடன் சாமியார் மல்லிகார்ஜுன முட்டவாவை பார்க்க வந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கினார். இந்த வேளையில் 7 வயது சிறுமியை அவர் கொஞ்சியுள்ளார். முத்தம் மல்லிகார்ஜுன முட்டவா மடியில் தூக்கி வைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவை பார்க்கும் பலரும் விமர்சனம் செய்தனர். சாமியார் மல்லிகார்ஜுன முட்டவா தவறான நோக்கத்தில் சிறுமியை மடியில் வைத்து முத்தமிட்டதாக கருத்து தெரிவித்தனர்.இது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. மேலும் வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட மல்லிகார்ஜுன முட்டவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டது.















