5 மாநிலங்களில் பிஜேபியின் முக்கியப் பிரச்சாரக் களமாகும் சமூக வலைதளங்கள்

புதுடெல்லி: பிப்ரவரி 28-
தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 5 மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேரவை தேர்​தல் அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் விரைவில் வெளி​யிட உள்​ளது. இவற்​றில் தனது பிரச்​சார உத்​தியை பாஜக மேலிடம் முடிவு செய்​துள்​ளது. இதில், தனது முக்​கியக் களமாக சமூகவலை​தளங்​களில் அதிக கவனம் செலுத்த பாஜக முடிவு செய்​துள்​ளது.
எதிர்க்​கட்​சிகள் ஆளும் மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்​களுக்கு ஒரு தனி உத்​தி​யை​யும், தேசிய ஜனநாயக கூட்​டணி ஆளும் அசாம் மற்​றும் புதுச்​சேரி மாநிலங்​களுக்கு ஒரு தனி உத்​தி​யை​யும் பயன்​படுத்த பாஜக முடிவு செய்​துள்​ளது. இந்த 5 மாநிலங்​களுக்​கான பிரச்​சா​ரங்​களில் தரவு சார்ந்த பிரச்​சா​ர​மாக, ஏ.ஐ. உதவி​யுடன் வீடியோக்​கள், ரீல்​ஸ்​கள், குறும்​படங்​கள், சிறிய வீடியோக்​கள் ஆகிய​வற்றை பாஜக பயன்​படுத்​தத் தயா​ராகி வரு​கிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் பாஜக​வின் தேசிய தலை​மையக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்த முறை மக்​களின் முக்​கியக் களமாகி​யுள்ள சமூகவலை​தளப் பிரச்​சா​ரத்​துக்கு அடிப்​படை​யாக ஏ.ஐ தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படும். இதன்​மூலம், எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநில அரசுகளின் தோல்வி​களை நகைச்​சுவை​யாக​வும், உண்​மை​யாக​வும் எடுத்​துக்​காட்​டும். இவற்​றில் பல முதல்​வர்​கள் மு.க.ஸ்​டா​லின், மம்தா பானர்​ஜி, பின​ராயி விஜயன் ஆகியோரை குறிவைக்​கும்.
கூடு​தலாக, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யை​யும் குறி​வைத்து இந்த வீடியோக்​கள் உரு​வாக்​கப்​படும். இந்​தவகைப் பிரச்​சா​ரங்​களில் ஏற்​படும் குழப்​பத்​தைத் தவிர்க்க அவை, ஏ.ஐ. மூலம் உரு​வாக்​கப்​பட்​டவை என தெளி​வாகக் குறிப்​பிடு​வது உறுதி செய்​யப்​படும். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.
பாஜக​வின் உத்​தி​யில் குறுகிய வடிவ வீடியோ உள்​ளடக்​கம் முக்​கிய பங்கு வகிக்க உள்​ளது. இன்​ஸ்​டாகி​ராம் ரீல்​கள், யூடியூப் குறும்​படங்​கள், பேஸ்​புக் ரீல்​கள் போன்ற தளங்​களில் குறுகிய, ஈடு​பாட்​டுடன் கூடிய மற்​றும் பிரபல​மான வீடியோக்​கள் மூலம் தனது செய்​தி​களை​யும், பிரச்​சா​ரத்​தை​யும் பரப்ப உள்​ளது பாஜக. இந்த வீடியோக்​களில் பிரதமர் மற்​றும் மூத்த தலை​வர்​களின் உரைகளின் பகு​தி​கள், சாதனை​களின் சிறப்​பம்​சங்​கள் மற்​றும் உள்​ளூர் பிரச்​சினை​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படும். பாஜக​வின் சமூக ஊடகக் குழு, தரவு சார்ந்த பிரச்​சா​ரத்​தி​லும் ஈடு​பட்​டுள்​ளது. வாக்​காளர் சுய​விவரங்​கள் மற்​றும் பிராந்​திய பிரச்​சினை​களின் அடிப்​படை​யில் இலக்கு செய்​தி​கள் உரு​வாக்​கப்​படு​கின்​றன. வாக்​குச்​சாவடி மட்​டத்​தில் டிஜிட்​டல் நெட்​வொர்க்​கிங் மற்​றும்​ தரவு சார்ந்​த செய்​தி​களை வழங்​குதல்​ ஆகிய​வற்​றில்​ கவனம்​ செலுத்​தப்​பட உள்​ளன.