எங்கள் வீரர்கள் இந்திய ஜெர்சியை அணியும் நேரம் வந்து விட்டது

புதுடெல்லி:பிப்ரவரி 28-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியின்
கடைசி நாளில் ஜம்மு காஷ்மீர் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஜம்மு-காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது. இதனையடுத்து கர்நாடகா முதல் இன்னிங்ஸில் 293 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 291 ரன்கள் முன்னிலை பெற்ற ஜம்மு-காஷ்மீர் அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 477 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கடைசி நாளில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு பிரகா சமாக உள்ளது.
67 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில், ஜம்மு காஷ்மீர் அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜம்மு-காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா கூறியுள்ளார்
இது குறித்து அவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது மிகப்பெரிய
தருணம். இதற்கு முன்பு எங்களால் இந்த நிலையை எட்ட முடியாது என்று பலர் கூறினர்.