அமெரிக்க டிவி தொடர் வாய்ப்பை நிராகரித்​தார் தீபிகா படு​கோன்

புதுடெல்லி: பிப்ரவரி 28-
பிரபல இந்தி நடிகை​யான தீபிகா படு​கோன், தமிழில் அட்லி இயக்கத்​தில் அல்லு அர்​ஜுன் நடிக்​கும் சயின்ஸ் பிக்சன் படத்​தில் நடித்து வரு​கிறார். சன் பிக்​சர்ஸ் தயாரிக்கும் இப்​படத்​துக்கு அனிருத் இசை அமைக்​கிறார். இதையடுத்து ஷாருக்​கானின் ‘கிங்’ படத்​தி​லும் நடித்து வருகிறார்.இந்​நிலை​யில் நடிகை தீபிகா படு​கோன் சர்​வ​தேச ஆங்​கில டிவி சீரியலில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகச் செய்திகள் வெளி​யாகியுள்​ளன. அமெரிக்​கா​வில் உரு​வான டிவி தொடர் ‘த ஒயிட் லோட்டஸ்’. காமெடி டிராமா வகை தொட​ரான இதை மைக் ஒயிட் இயக்​கி​யுள்​ளார். இது​வரை 3 சீசன்​கள் வெளி​யாகி உலகம் முழு​வதும் அதி​கம் பார்க்​கப்​பட்ட டிவி தொட​ராக இது வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இதன் நான்​காவது சீசன் இப்போது உரு​வாகி வரு​கிறது.
இதில் நடிக்க தீபிகா படு​கோனிடம் பேச்சு வார்த்தை நடந்தது. முதலில் இதில் நடிக்க ஆர்​வம் காட்​டிய தீபிகா படு​கோன் இப்​போது அதில் இருந்து வில​கி​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.