இந்தியாவில் கனடா பிரதமர் சுற்றுப்பயணம்

மும்பை, பிப். 28- நான்கு நாள் அரசு​முறைப் பயண​மாக கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று இந்​தியா வந்​தடைந்​தார். இந்​தி​யா​வுட​னான உறவை சீரமைக்​க​வும், வர்த்​தகத்தை மேம்​படுத்​த​வும் கனடா பிரதமரின் இந்த பயணம் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக பார்க்​கப்​படு​கிறது. மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் வந்​திறங்​கிய மார்க் கார்​னி, அங்​குள்ள முன்​னணி தொழில் அதிபர்​கள் மற்​றும் வணி​கக் குழுக்​களைச் சந்​தித்​துப் பேசி​னார். இன்று அவர் டெல்லி செல்​கிறார். அங்கு திங்​கள்​கிழமை பிரதமர் மோடியை சந்​தித்து ஆலோசனை நடத்துகிறார்.