
பாகிஸ்தான்: மார்ச் 1-
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி, பைலட்டை உயிருடன் பிடித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர் மோதல் நடைபெற்று வந்ததால், ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர் தொடுப்பதாக பாகிஸ்தான் நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் காபூல், காந்தகார், பக் ஷியா உட்பட பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் 2 நாட்களுக்கு முன் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் 270 தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்றும், 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்றும் பாகிஸ்தான் கூறியது. ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில், பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அதன் பைலட்டை உயிருடன் பிடித்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் போலீஸ் செய்தி தொடர்பாளர் தயீப் ஹமாத் கூறியுள்ளார். இதை ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் வஹிதுல்லா முகமதியும் உறுதி செய்துள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் கூறுவது பொய் என பாகிஸ்தான் மறுத்துள்ளது.

















