
துபாய், மார்ச் 1- ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே அந்த பிராந்தியம் முழுக்க பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தாக்குதலில் கமேனி உயிரிழந்துவிட்டார். மேலும், பல முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் இதில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர் பதற்றங்களால் மத்திய கிழக்கில் விமானச் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை துபாய் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கிறார். அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து விமான நிலையச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், ஆல் இங்கிலாந்து ஓபன் தொடருக்கு அவர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

















