வாராணசியில் ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை:

புதுடெல்லி, மார்ச் 3- உத்தர பிரதேசத்​தின் வாராணசி மக்​களவை தொகுதி உறுப்​பின​ராக பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளார். அங்கு மாநக​ராட்சி சார்​பில் 350 ஏக்​கர் நிலப்​பரப்​பில் ‘நமோ வனம்’ என்ற பெயரில் ஒரு நகர்ப்​புறக் காடு உரு​வக்​கப்​பட்​டுள்​ளது. அதில் ஒரு மணி நேரத்​துக்​குள் 2,51,446 லட்​சம் மரக்​கன்​றுகள் நடப்​பட்டு புதிய கின்​னஸ் உலக சாதனை படைக்​கபப்​பட்​டுள்​ளது. இதற்கு முன்பு சீனா​வில் ஒரு மணி நேரத்​தில் 1,53,981 மரக் கன்றுகள் நடப்​பட்​டது​தான் உலக சாதனை​யாக இருந்​தது. இந்த சாதனை இப்​போது முறியடிக்​கப்​பட்​டுள்​ளது. கங்கை நதித் தொடர்ச்சி மலைகளுக்கு அரு​கில் சுஜா​பாத் டோம்ரி பகுதியில் அமைந்துள்ள நமோ வனத்தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பொதுநல அமைப்​பினர் உள்​ளிட்ட சுமார் 20,000 பொது​மக்​கள் பங்​கேற்​று மரக்​கன்​றுகளை நட்​டனர். நமோ வனம் திட்​டத்​தின் கீழ் மொத்​தம் 3,00,000 மரக்​கன்​றுகள் நடப்​படு​கின்​றன. இதில் 2,50,000 மியா​வாகி இன மரங்​கள், 10,000 பலகைகளுக்​கான மரங்​கள் மற்​றும் 40,000 பழ மரங்​கள் அடங்கும்.