
டெஹ்ரான், மார்ச் 3- போரை தொடங்கி உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ரஸ், கத்தார், பஹ்ரைன், ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளை ஈரான் தாக்கி வரும் நிலையில் அந்த நாடுகள் ஈரானை திருப்பி தாக்க தயங்கும் நிலையில் அதன் பின்னணியில் ‘முஸ்லிம் உம்மா’ எனும் முக்கிய அம்சம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றன.
ஈரான் மீது தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பி இஸ்ரேலும், அமெரிக்காவும் ‘அட்டாக்’ செய்கின்றன. இதில் போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட அமைச்சர், அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வருகிறது. இன்று 4வது நாளாக போர் வீரியமாகி உள்ளது.


















