
சென்னை: மார்ச் 17 –
பான் கார்டு விதிகளில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ள நிலையில் அவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மாதந்தோறும் பான் கார்டு, கேஸ் சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு, சுங்கக் கட்டணம் உள்ளிட்டவைகளில் விதிகள், விலையில் மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி பான் கார்டு விவகாரத்தில் மாற்றங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் இதுவரை ஒரு நாளைக்கு ரூ 50 ஆயிரம் பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ மட்டுமே பான் கார்டு தேவைப்பட்டது. ஆனால் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு பணத்தை வரவு வைப்பதோ அல்லது எடுப்பதோ ரூ 10 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவை. வாகனங்கள் வாங்க இதுவரை எந்த ஒரு இரு சக்கரம், மூன்று சக்கரம், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை வாங்கினாலே பான் கார்டு கட்டாயமாக சமர்ப்பித்தல் வேண்டும். ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வாகனத்தின் மதிப்பு ரூ 5 லட்சத்திற்கு மேல் சென்றால் மட்டுமே பான் கார்டு தேவை.இன்சூரன்ஸ் பாலிசி மார்ச் 31 ஆம் தேதி வரை காப்பீடு ப்ரீமியத் தொகை ஆண்டுக்கு ரூ 50 ஆயிரத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவைப்படுகிறது. ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ப்ரீமியத் தொகை எவ்வளவு இருந்தாலும் சரி இன்சூரன்ஸ் போட பான் நம்பர் கட்டாயம் தேவைப்படுகிறது.

















