Home தலைப்பு செய்தி விஜய் தமிழக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு

விஜய் தமிழக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு

சென்னை,மே.8-
தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஆக விஜய் பதவி ஏற்கிறார் அவருடன் புதிய மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர்
இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைய தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை விஜய் சந்தித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தம்மை ஆட்சி அமைக்க உரிமை கூறினார். ஆனால் விஜய்யை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று விஜய் அழைத்த கவர்னர் பெரும்பான்மை குறித்த விளக்கங்கள் கேட்டார் போதிய பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாமல் நீங்கள் எப்படி ஆட்சி அமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுப்பது ஏற்பட்டது
தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற 108 தொகுதிகளில் விஜய் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதால் இந்த கட்சியின் எண்ணிக்கை பலம் 107. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் விஜய் கட்சிக்கு 112 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தனர் மீதி 6 எம்எல்ஏக்கள் ஆதரவை பெறுவதற்காக விஜய் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை வலது மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் கட்சிக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை தெரிவித்தன இந்த இரண்டு கட்சிகளின் நான்கு எம்எல்ஏக்கள் சேர்த்து விஜய் கட்சியில் விமலேக்கள் பலம் 116 ஆக உயர்ந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்தும் அவர்கள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனால் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் திடீரென ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து விஜய்க்கு தேவையான பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பலம் கிடைத்தது. பெரும்பான்மை பலம் கிடைத்த பிறகு விஜய் இன்று மாலை மீண்டும் மூன்றாவது முறையாக கவர்னரை சந்திக்க சென்றார் தனது கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரிக்கும் கட்சி எம்எல்ஏக்களின் கடிதங்களை வழங்கி தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பு சுமுகமாக முடிந்ததாகவும் விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் ஒப்புதல் அளித்ததாகவும் கவர்னர் மாளிகை வட்டாரம் தெரிவித்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் தலைமையில் புதிய மந்திரி சபை பதவி ஏற்க இருப்பதாக தெரிகிறது இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் விஜய் கட்சிக்கு தாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திடீரென அறிவித்து உள்ளது. அதேசமயம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் நாளை விஜய் அவர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தடைபடலாக நடந்து வருகிறது