Home மாவட்டங்கள் பெங்களூர் தொகுதி, வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக அணிகள் தீவிரம்

தொகுதி, வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக அணிகள் தீவிரம்

சென்னை: மார்ச் 27 –
சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான தொகு​தி​கள் ஒதுக்​கீடு மற்​றும் வேட்​பாளர்​களை தேர்வு செய்​யும் பணி​களில் திமுக, அதி​முக கட்​சிகள் தீவிரம் காட்டி வரு​கின்​றன.
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேர்​தலுக்​கான வேட்பு மனு தாக்​கல் மார்ச் 30- முதல் தொடங்​க​வுள்​ளது. தேர்​தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்​ப​தால் அனைத்து அரசி​யல் கட்​சிகளும் தேர்​தல் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளன. இந்த முறை திமுக, அதி​முக, தவெக, நாம் தமி​ழர் என 4 முனைப் போட்டி நில​வு​கிறது. இதில் தவெக, நாம் தமி​ழர் ஆகியவை தனித்து களமிறங்க, திமுக, அதி​முக கூட்​டணி பலத்​துடன் போட்​டி​யிட உள்​ளன.
இந்​நிலை​யில் ஆளும் திமுக​வும், எதிர்க்​கட்​சி​யான அதி​முக​வும் தொகுதி பங்​கீடு மற்​றும் வேட்​பாளர் தேர்​வில் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளன. அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன. அதி​முக 169 தொகு​தி​களில் நேரடி​யாக போட்​டி​யிடு​வது உறு​தி​யாகி​யுள்​ளது. மேலும், அதி​முக​வின் 23 வேட்​பாளர்​கள் அடங்​கிய பட்​டியலை​யும் பழனி​சாமி நேற்று முன்​தினம் வெளி​யிட்​டார். அதன்​படி சேலம் எடப்​பாடி தொகு​தி​யில் பழனி​சாமி மீண்​டும் போட்​டி​யிடு​கி​றார்.இதையடுத்து மீத​முள்ள 146 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை தேர்வு செய்​யும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. இதுதொடர்​பாக மூத்த தலை​வர்​களு​டன் பழனி​சாமி தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார்.வேட்​பாளர் தேர்​வில் ஜெயலலிதா பாணி இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக கடைக்​கோடி தொண்​டர்​கள், சமூக பிர​தி​நி​தித்​து​வம், பாலின பிர​தி​நி​தித்​து​வம், புதிய முகங்​கள், தேர்​தல் செல​வு​களை சமாளிக்​கும் நிதி வலிமை உள்​ளோருக்கு வாய்ப்பு அளிக்க இருப்​ப​தாக​வும், அனைத்து தரப்​பினரை​யும் திருப்​திப்படுத்​தும் வித​மாக வேட்​பாளர் தேர்வு இருக்​கும் எனவும் அதி​முக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.