Home முக்கிய செய்தி விஜய் திடீர் முடிவு

விஜய் திடீர் முடிவு

கொளத்தூர்: ஏப்ரல் 1-
பரப்புரையில் ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார வியூகத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஊர்ந்து சென்றதால், அவரால் பிரச்சாரத்தை தொடர முடியவில்லை. பாதியிலேயே பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார். காவல்துறை தரப்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்குக் காரணம்.இனி வரும் நாட்களிலும் இது போன்ற சிக்கல்கள் வரலாம் என்பதால் இனிமேல், ‘வீடியோ வடிவிலான’ பிரச்சாரத்தை முன்னெடுக்க விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர் குறித்தும், அங்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் விஜய் பேசிப் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன.இதை அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பெரிய திரைகளில் ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமான தொகுதிகளுக்கு மட்டுமே நேரில் செல்லத் திட்டமிடும் விஜய், மற்ற இடங்களுக்கு வீடியோ பிரச்சாரமே போதும் என நினைக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.