Home விளையாட்டு லக்னோ – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

லக்னோ – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

லக்னோ, ஏப்ரல் 1- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ​வில் நடை​பெறும் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. இம்​முறை அந்த அணி முழு​மை​யான உடற்​தகு​தியை கொண்ட வீரர்​களை உள்​ளடக்​கிய​தாக உள்​ளது. அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, அன்​ரிச் நோர்க்​கியா வேகப்​பந்து வீச்​சுத்​துறை​யில் பலம் சேர்க்​கக்​கூடும். இளம் வேகப்​பந்து வீச்​சாள​ரான மயங்க் யாத​வும் முழு உடற்தகுதி​யுடன் களமிறங்​கு​கிறார். மோஷின் கான், பிரின்ஸ் யாதவ் ஆகியோ​ரும் வேகப்​பந்து வீச்​சுத்​துறை​யில் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். சுழற்​பந்து வீச்​சில் திக்​வேஷ் ராதி, மணிமாறன் சித்​தார்த் ஆகியோர் எதிரணி​யின் பேட்​ஸ்​ மேன்​களுக்கு நெருக்​கடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். பேட்டிங்​கில் மிட்​செல் மார்​ஷ், எய்​டன் மார்க்​ரம் டாப் ஆர்டரில் அதிரடி​யாக விளை​யாடும் திறன் கொண்டவர்கள். கடந்த ஆண்​டில் 4-வது இடத்​தில் களமிறங்​கிய ரிஷப் பந்த் பெரிய அளவில் சோபிக்​க​வில்​லை. இதனால் அவர், இம்​முறை 3-வது இடத்​தில் களமிறங்​கக்​கூடும். இது நிகழும் பட்​சத்​தில் நிகோலஸ் பூரன் 4-வது இடத்​தில் விளையாடக்கூடும். டெல்லி கேப்​பிடல்ஸ் அணி அக்​சர் படேல் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அந்த அணி கடந்த சீசனில் சரி​யான அணிச் சேர்க்​கையை கண்​டு​பிடிக்க முடி​யாமல் தொடக்க வரிசை​யில் 7 ஜோடிகளை பயன்​படுத்தி இருந்​தது. இம்​முறை​யும் அந்த அணிக்கு இந்த சிக்​கல் ஏற்​படக்​கூடும். கே.எல்​.​ராகுல் தொடக்க வீர​ராக களமிறங்​கு​வது ஏறக்​குறைய உறுதியாக உள்ள நிலையில் அவருடன் எந்த பேட்​ஸ்​மேன் களமிறங்​கு​வார் என்​பது இன்​னும் தெளிவு ​படுத்​தப்​பட​வில்லை.