Home விளையாட்டு அமை​தி​யாக சாதித்து காட்​டிய வைஷாலி

அமை​தி​யாக சாதித்து காட்​டிய வைஷாலி

சென்னை, ஏப்ரல் 17- உலக செஸ் சாம்பியன்ஷிப்​​பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்​க​னையை தேர்வு செய்​வதற்​கான கேண்​டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்​ரஸ் நாட்​டின் பாஃ​போஸ் நகரில் நடை​பெற்​றது. இதன் 14-வது மற்​றும் கடைசி சுற்று நேற்​று​முன்​தினம் நடந்​தது. ஆடவர் பிரி​வில் ஏற்​கெனவே பட்​டம் வெல்​வதை உறுதி செய்​திருந்த உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்த்​ரோவ், சீனா​வின் வெய்​யி​யுடன் டிரா செய்​தார். 14 சுற்​றுகளின் முடி​வில் 10 புள்​ளி​களு​டன் முதலிடத்தை பிடித்த சிந்த்​ரோவ் உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பில் விளை​யாட தகுதி பெற்​றார். அவர், உலக சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் இந்தியா​வின் குகேஷுடன் விளை​யாட இருக்​கிறார். மகளிர் பிரிவு கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்டரான ஆர்​.வைஷாலி ரஷ்யா​வின் கேத்​ரினா லாக்னோவை எதிர்​கொண்​டார். வெள்​ளைநிற காய்களுடன் ஆடிய வைஷாலி 48-வது நகர்த்​தலில் வெற்றி பெற்​றார். அவருடன் சவாலுக்கு நின்ற கஜகஸ்​தானின் பிபி​சாரா அசவுபயேவா கடைசி சுற்​றில் இந்​தி​யா​வின் திவ்யா தேஷ்​முக்​குடன் டிரா செய்​தார். முடி​வில் வைஷாலி 8.5 புள்​ளி​களு​டன் முதலிடத்தை பிடித்து சாம்​பியன் பட்​டத்தை கைப்​பற்​றி​னார். இதன் மூலம் கேண்​டிடேட்ஸ் போட்​டி​யில் வாகை சூடிய முதல் இந்​திய வீராங்​கனை என்ற வரலாற்று சாதனையை 24 வயதான வைஷாலி படைத்​தார். அத்​துடன் ஆண்​டின் இறுதி​யில் நடக்​கும் மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்​பியனா சீன வீராங்​கனை ஜூ வென்​ஜூனுடன் மோதும் வாய்ப்​பை​யும் பெற்றுள்ளார்.