Home மாவட்டங்கள் பெங்களூர் காந்தி சிலை சேதம் – மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது

காந்தி சிலை சேதம் – மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது

ஹாவேரி: ஏப்ரல் 21 –
கர்நாடக மாநிலம் ஹாவேரி‌ நகரின் காந்தி சர்க்கிளில் உள்ள காந்திஜி சிலையை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வைபவ் ராய்கர் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக, நகர காவல்துறையின் எஸ்.பி. யசோதா வந்தகோடி ஒரு சிறப்பு குழுவை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.
குற்றவாளி வைபவ் ராய்கர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் போலீசார் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
இரண்டு அடி உயரமுள்ள காந்திஜி சிலை நேற்று அதிகாலை உடைந்த நிலையில் காணப்பட்டது. அதன் வலது கை உடைந்திருந்தது. சமூக விரோதிகளின் செயலுக்கு உள்ளூர் மக்கள் கோபம் தெரிவித்திருந்தனர். போலீசார் குற்றவாளியை காவலில் எடுத்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். ஹாவேரி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.