Home செய்திகள் தேசிய செய்திகள் “பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” மோடி உறுதி

“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” மோடி உறுதி

டெல்லி: ஏப்ரல் 22-
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, “பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது” என்று தெளிவுபடுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். அவர்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எந்த வடிவத்திலான பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் தலைவணங்காது என்று பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், நாடாக நாம் அனைவரும் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் நாட்டை உலுக்கியது. அதன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று (ஏப்ரல் 22, 2026) கடைபிடிக்கப்படுகிறது.