Home மாவட்டங்கள் பெங்களூர் காதலனை உயிரோடு கொன்றது ஏன்? காதலி பரபரப்பு வாக்குமூலம்

காதலனை உயிரோடு கொன்றது ஏன்? காதலி பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூரு, ஏப்ரல் 22-
மேல்நாட்டு பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி இளைஞனின் கைகளையும் கால்களையும் கட்டி, அவனது ஆடைகளைக் களைந்து, அவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்த கொலை வழக்கு குறித்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது., அந்த இளைஞன் தன் காதலியைப் புறக்கணித்து, அவளது முன்னாள் காதலியுடன் தொடர்பு வைத்திருந்ததே கொலைக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனால் இளைஞர் கிரண் என்பவர் காதலி பிரேமா என்பவரால் மேற்கண்டவாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். என்னைப் பிரிந்து முன்னாள் காதலி வசம் சென்றதால் கோபம் அடைந்து இவ்வாறு கொலை செய்தேன் என்று காதலி வாக்குமூலம் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரணுக்குக் பிரேமா உடன் காதல் உறவு ஏற்பட்டது. சில நாட்களாக திடீரென பிரேமாவைப் புறக்கணிக்கத் தொடங்கிய கிரண், தன் முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்து, சமீபத்தில் அவளது பிறந்தநாளைக் கொண்டாடி, புகைப்படங்களும் எடுத்துள்ளார். இதைக் கண்ட பிரேமா, கிரணுடன் சண்டையிட்டார். அதன் பிறகு, கிரண் பிரேமாவின் எண்ணை முடக்கினார்.
பின்னர், பிரேமா மற்றொரு எண்ணிலிருந்து கிரணை அழைத்து, தான் சொன்ன நாளில் திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்தார்.
இந்தக் கொலை வெறும் இரண்டு நாட்களில் திட்டமிடப்பட்டது, என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், பிரேமா கூகிளில் தேடிப் பார்த்து மட்டுமே இந்தக் கொலையைத் திட்டமிட்டாரா அல்லது இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருந்ததா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.