Home விளையாட்டு பஞ்சாப் கிங்ஸ் அணியை சமாளிக்குமா டெல்லி? – இன்று மோதல்

பஞ்சாப் கிங்ஸ் அணியை சமாளிக்குமா டெல்லி? – இன்று மோதல்

புதுடெல்லி, ஏப்ரல் 25- ஐபிஎல் தொடரில் இன்று பிற்​கல் 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 47 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது. டெல்​லி​யின் மிகப்​பெரிய கவலையே அவர்​களின் சீரற்ற பேட்​டிங் தான். கே.எல்​.​ராகுல், டேவிட் மில்​லர், டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், சமீர் ரிஸ்வி ஆகியோர் அவ்​வப்​போது தங்​களின் பங்​களிப்பை அளித்​தா​லும், ஒரு குழு​வாகச் சேர்ந்து செயல்பட அந்த அணி தவறி உள்​ளது. தொடக்க வீர​ரான நிசங்​கா​வின் ஆட்​டம் டெல்லி அணிக்கு பலவீன​மாக மாறி​யுள்​ளது. ஆட்​டத்தை சிறப்​பாக தொடங்​கி​னாலும் அதை பெரிய ஸ்கோ​ராக மாற்ற அவர் தவறி​விடு​கிறார். இதனால் மிடில் ஆர்​டர் பேட்​டர்​கள் மீதான அழுத்​தம் அதி​கரிக்​கிறது. குறிப்​பாக, பவர்​பிளே ஓவர்​களில் நிசங்கா விக்​கெட்டை இழப்​பது அல்​லது ரன் வேகத்தை உயர்த்​தத் தவறு​வது, பின்​வரிசை​யில் வரும் வீரர்​களை இக்​கட்​டான சூழ்​நிலைக்​குத் தள்​ளுகிறது. இதுஒரு புறம் இருக்க கேப்​டன் அக்​சர் படேல் கடந்த போட்​டி​யில் களத்​தில் கையாண்ட சில உத்​தி​கள் சார்ந்த கடும் விமர்​சனத்​திற்கு உள்​ளாயின. அதிரடி​யாக ஆடிக்​கொண்​டிருந்த அபிஷேக் சர்​மா​விற்கு எதி​ராக, அக்​சர் படேல் பகு​திநேர ஆஃப்​-ஸ்​பின்​ன​ரான நிதிஷ் ராணாவையே தொடர்ந்து பந்​து​வீச வைத்​தார். ஆனால், ராணா​வால் எந்​தவொரு தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்த முடிய​வில்​லை. அதே சமயம் குல்​தீப் யாதவ் போன்ற முன்​னணி பந்​து​வீச்​சாளர்​களை சிறப்​பாக கையாள​வில்​லை. டெல்லி அணி​யின் இந்​தச் செயல்​பாடு நெருக்​கடி​யான நேரங்​களில் அவர்​களிடம் மாற்​றுத் திட்​டம் ஏது​மில்லை என்​ப​தை​யும், சூழலுக்கு ஏற்ப மாறும் தன்​மை​யும் அவர்​களிடம் குறை​வாக இருப்​பதை வெளிச்​சம் போட்​டுக் காட்​டி​யுள்​ளது. பேட்​டிங் வரிசையை விட பந்​து​வீச்​சுப் பிரிவு சற்று சிறப்​பாகச் செயல்​பட்​டிருந்​தா​லும், எதிரணி வீரர்​களை முழு​மை​யாகக் கட்​டுப்​படுத்​தத் தேவை​யான ஆக்​ரோஷ​மும் துல்​லிய​மும் அவர்​களிடம் குறை​வாகவே உள்​ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 5 வெற்​றி, ஒரு முடி​வில்​லாத ஆட்​டம் என 11 புள்​ளி​களை குவித்து பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளது.