
கொல்கத்தா: ஏப்ரல் 25 –
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களிலும், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று ஹிமந்த பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “இம்முறை நாங்கள் அசாமில் சதம் அடிப்போம். மேற்கு வங்கத்தில் இரட்டை சதம் அடிப்போம். அதாவது, அசாமில் 100 இடங்களை வெல்வோம். மேற்கு வங்கத்தில் 200 இடங்களை வெல்வோம்.
மேற்கு வங்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும் பாஜக ஆட்சியை அமைக்கவுமே பொதுமக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். மேற்கு வங்க முதற்கட்டத் தேர்தலிலேயே பாஜக 110 இடங்களை வென்றுவிட்டது. மேற்கு வங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சுனாமி போன்ற அலையால், பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அது அச்சரியப்படும் விஷயமாக இருக்காது.



















