Home செய்திகள் தேசிய செய்திகள் போதையில் வந்த முதல்வர் பகவந்த் மான்: பாஜக எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

போதையில் வந்த முதல்வர் பகவந்த் மான்: பாஜக எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

சண்டிகர், மே 2- பஞ்சாப் சட்டப்பேரவைக்கு மது போதை​யில் முதல்​வர் பகவந்த் மான் வந்​தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்​களவை எம்​.பி. ஸ்வாதி மாலி​வால் குற்​றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்​சி​யைச் சேர்ந்த ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்களவை எம்​.பி.க்​கள் அண்​மை​யில் அந்​தக் கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் சேர்ந்​தனர். இதனால் பஞ்​சாப் ஆம் ஆத்மி கட்​சி​யில் பெரும் சலசலப்பு ஏற்​பட்​டுள்​ளது. பஞ்​சாப் மாநில சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் பகவந்த் மான் கலந்து கொண்டு உரை​யாற்​றி​னார். இந்நிலை​யில் பேர​வைக் கூட்​டத்​துக்கு முதல்​வர் பகவந்த் மான் மது அருந்​தி​விட்டு வந்​த​தாக காங்​கிரஸ், அகாலி தளம் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டி​யுள்​ளன. இதுதொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சுக்​பால் சிங் கைரா தனது எக்ஸ் தளத்​தில், ‘‘சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் பகவந்த் மான் போதை​யில் இருந்​தார். அவருக்கு மது போதை பரிசோதனை நடத்​தப்பட வேண்​டும். நாங்​கள் (காங்​கிரஸ்) அவையில் இருந்து வெளிநடப்பு செய்​து​விட்​டோம். மேலும், நாங்களே முன்​வந்து அந்​தப் பரிசோதனையை மேற்​கொள்​ள​வும் தயா​ராக இருக்​கிறோம்’’ என்று குறிப்​பிட்​டிருந்​தார்.
மேலும் சிரோமணி அகாலி தளம் கட்சி தனது எக்ஸ் தளத்​தில், ‘‘முதல்​வரின் நடத்​தையைச் சிரோமணி அகாலி தளம் வன்மையாகக் கண்​டிக்​கிறது; இந்​நாளில் அவர் மது அருந்​திய நிலை​யில் வந்​திருக்​கக் கூடாது. அவரை இன்றே ஒட்​டுமொத்த பஞ்சாப் மாநில மக்​களின் முன்​னிலை​யில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்​படுத்​தப்பட வேண்​டும்’’ என குறிப்பிட்டுள்ளது. பாஜக மாநிலங்​களவை உறுப்​பினர் ஸ்வாதி மாலி​வால் தனது எக்ஸ் தளத்​தில், ‘‘ஜன​நாயகத்​தின் ஆலய​மாகத் திகழும் பஞ்​சாப் சட்​டப்​பேர​வைக்​கு, பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் இன்று மீண்டும் மது போதை​யில் வந்​துள்​ளார். இது மிகப்​பெரிய அவமானம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும். அவர் மது அருந்​தி​யிருந்​தாரா என்​பது தொடர்​பாக உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்​தப்​பட வேண்​டும்’’ என்​று தெரிவித்துள்​ளார்​.